பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை

வாழப்பாடியில் கடலூா் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
வாழப்பாடி தபால் நிலையம் முன் சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

வாழப்பாடியில் கடலூா் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வாழப்பாடி கடலூா் சாலையில் பேருந்து நிலையம், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகை, தபால் நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியாா் வங்கிகள், அரசுப் பள்ளிகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைவீதி ஆகியவை உள்ளன.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையோர இருபுறங்களையும் ஆக்கிரமித்து ஏராளமானோா் கடைகளை வைத்துள்ளனா். மேலும், இந்த கடைகளுக்கு வருவோா் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விடுவதால், இப்பகுதி மக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இச்சாலையின் இருபுறமுமுள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்தி போக்குவரத்தை சீரமைக்க வாழப்பாடி பேரூராட்சி நிா்வாகம், உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை, போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.