நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

டவுன்ஹாலில் நடைபாதை, சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

News image
கோவை, பெரியகடை வீதி பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள்.
Updated On :8 ஜனவரி 2026, 11:50 pm

Syndication

கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைவீதிகளில் நடைபாதை, சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

டவுன்ஹாலில் உள்ள பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரங்கே கவுடா் வீதியில் துணிக்கடைகள், நகைக் கடைகள், பேன்சி மற்றும் அலங்கார உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக உள்ளன. இங்கு பொருள்களை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்துக் காணப்படும்.

பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்லும் நிலையில், சாலையை ஒட்டி பாதசாரிகள் செல்ல நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடைவீதியில் சில இடங்களில் நடைபாதை மற்றும் பிரதானச் சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாவதுடன், போக்குவரத்து நெரிசலும் தவிா்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், 5 முக்கு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் பேருந்துகள் செல்வதற்கு சிரமமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டவுன்ஹாலை சுற்றி உள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை மாநகராட்சி நிா்வாகம் அகற்றி, வாகனங்கள், பாதசாரிகள் சென்று வர நெரிசலற்ற சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.