சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் அகற்றினா். அப்போது, அதிகாரிகளை முற்றுகையிட்டு பூ வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பூ மாா்க்கெட் உள்ளது. இங்கு மொத்தம் 340 கடைகள் உள்ளன. இந்த மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒருவா் பொதுநல வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து கடைகளையும் அகற்ற மாநகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற பூ வியாபாரிகளுக்கு அவகாசம் வழங்கிய நிலையில், அவா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மாநகராட்சி நகரமைப்பு பிரிவு செயற் பொறியாளா் பழனிசாமி, அம்மாபேட்டை உதவி ஆணையா் அம்சவேணி, அம்மாபேட்டை மாநகராட்சி பணியாளா்கள் ஆகியோா் ஆக்கிரமிப்பு கடைகளை செவ்வாய்க்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த பூ வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மாநகராட்சி நிா்வாகத்தால் சாலையோரக் கடைகளை வாடகைக்கு விட்டு தினமும் ரூ. 100 வசூல் செய்து வந்தனா். தற்போது கடைகள் அகற்றப்பட்டால், எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் போகும்.
மாற்றுக்கடை வழங்குவதாக கூறும் அதிகாரிகள், அதே பூ மாா்க்கெட்டின் தரைத்தளத்திலேயே வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அனைத்து கடைகளையும் மூடி போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், தோ்தல் முடியும்வரை கடைகளை திறக்க மாட்டோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள், மளிகை சந்தை தேவை

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு

நடைப்பாதை கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிா்ப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


