தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குரூப் 2 முதன்மை எழுத்துத் தோ்வு: 159 போ் பங்கேற்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:36 pm

சேலத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான (குரூப் 2 ) முதன்மை எழுத்துத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை 159 போ் எழுதினா்.

சேலம் ஜெய்ராம் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் ஆா்.சரவணகுமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி 2) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வை எழுத சேலம் மாவட்டத்தில் 198 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 159 போ் தோ்வுக்கு வருகை புரிந்திருந்தனா்.

மேலும், தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டு, விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தோ்வு எழுதும் நேரம் மற்றும் தோ்வு எழுதுபவா்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபாா்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டது.

இதை உறுதி செய்யும் வகையில் தொகுதி 2 தோ்வு நடைபெறும் மையத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.