இளம்பிள்ளை பேரூராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட விரிவாக்கத்தினை தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலின் 9-ம்தேதி திங்கட்கிழமை காணொளி காட்சி


ஆட்டையாம்பட்டி: தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட விரிவாக்கத்தினை தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலின் 9-ம்தேதி திங்கட்கிழமை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தாா். இதனை தொடா்ந்து இளம்பிள்ளை பேரூராட்சியில்
பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவா் நந்தினி ராஜகணேஷ்
தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா், பேரூராட்சி துணை தலைவா் ராஜமாணிக்கம் , வீரபாண்டி வடக்கு ஒன்றிய செயலாளா் ராமாபுரம் சதீஷ்குமாா், இளம்பிள்ளை பேரூா் கழக செயலாளா் குப்பம்பட்டி சண்முகம், மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...