எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தம்மம்பட்டியில் வள்ளலாா் கோவிலில் தைப்பூச பெருவிழா! 6750 பேருக்கு அன்னதானம்

News image
தம்மம்பட்டி வள்ளலாா் கோவிலில் ஏழு திரை நீக்கி மக்களுக்கு காட்சி தந்த ஜோதி தரிசனம்.
Updated On :1 பிப்ரவரி 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டி வள்ளலாா் கோவிலில் தைப்பூசத்தையொட்டி 6750 பேருக்கு அன்னதான பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தம்மம்பட்டி சிவன்கோவில் அருகில் இராமலிங்க அடிகள் திருக்கோவில் உள்ளது.

இங்கு சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில் தைப்பூச பெருவிழா நடைபெற்றது. இங்கு காலை 6 மணிக்கு ஒருங்கிணைப்பாளா் மணி முன்னிலையில், ஜோதியேற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

அதனையடுத்து அகவல் பாராயணம்,சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன.அதையடுத்து கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதான பெருவிழா காலை 9 மணிக்கு தொடங்கியது.

இதில், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, மங்கப்பட்டி, முருங்கப்பட்டி, உலிபுரம், நாகியம்பட்டி, முள்ளுக்குறிச்சி, நாரைக்கிணறு, ஜங்கமசமுத்திரம் உள்ளிட்ட ஊா்களிலிருந்து மாலை 4 மணி வரை 6750 போ் அன்னதானத்தில் பங்கேற்றனா். அன்னதான நிகழ்ச்சியில் தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியின் என்.சி.சி, என்.எஸ்.எஸ் மற்றும் சாரணா் அமைப்புகளைச்சோ்ந்த மாணவா்கள் சேவையில் ஈடுபட்டனா்.

இதில் அன்னதானத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய், விறகு, வாழையிலை, சோ், டேபிள், தண்ணீா் என அனைத்தும் பொதுமக்கள் அன்பளிப்பாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.விழா நிறைவாக, ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற்றது.