டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வடலூா் வள்ளலாா் சத்ய ஞானசபையில் தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம் இன்று (பிப். 1) காலை 6 மணியளவில் நடைபெற்றது.

News image
தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம் / வடலூரில் குவிந்த பக்தர்கள்- படம் - எக்ஸ்
Updated On :1 பிப்ரவரி 2026, 2:42 am

இணையதளச் செய்திப் பிரிவு

வடலூா் வள்ளலாா் சத்ய ஞானசபையில் தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம் இன்று (பிப். 1) காலை 6 மணியளவில் நடைபெற்றது.

திரையை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும், காலை 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாளான திங்கள்கிழமை (பிப். 2) காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.

வடலூா் வள்ளலாா் சத்ய ஞான சபையில் 155-வது தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (ஜன.31) காலை தொடங்கியது.

தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி, நேற்று காலை 7.30 மணியளவில் தருமசாலையிலும், மருதூர் மற்றும் நற்கருங்குழி வள்ளலாா் சந்நிதியிலும், காலை 10 மணியளவில் ஞானசபையிலும் சன்மாா்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது.

ஞானசபையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வள்ளலார் திருவுருவப் படம், சன்மார்க்க கொடி, அவர் பயன்படுத்திப் பொருட்கள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை திரை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வருகிற 3-ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது.

தைப்பூசத்தையொட்டி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.