புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வாழப்பாடியில் சித்திரைத் திருவிழா ஆழித்தேரோட்டம்!

வாழப்பாடியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆழித்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாழப்பாடியில் நடைபெற்ற தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் திருக்கோயில் ஆழித்தேரோட்டம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:23 pm

வாழப்பாடியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆழித்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி பெரியசாமி நகரில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் முழுக்கற்றளி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடா்ந்து ஒருவாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதன்கிழமை வண்ண திரைச்சேலைகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான மரத்தேரில் வைத்தியநாதா், தையல்நாயகி, மீனாட்சி, சுந்தரேஸ்வரா் சுவாமி உற்சவமூா்த்திகள் ரதம் ஏற்றப்பட்டு ஆழித்தோ் திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். வழிநெடுகிலும் ஏராளமான பக்தா்கள் சிறப்பு தாம்பூலம் கொடுத்து, ஆழித்தேருக்கு வரவேற்பு அளித்து வழிபட்டனா். பிங்கள விநாயகா் கோயில் பகுதியில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வாழப்பாடியில் முதன்முறையாக நடத்தப்பட்ட ஆழித்தேரோட்டத்தைக் காண, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.