சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் வந்தது. இதுகுறித்து சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து சோதனை செய்தனா். சுமாா் அரைமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டோ மற்ற பொருள்களோ ஏதும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம், கடலூா் ஆட்சியரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


