ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சுதந்திர தினம்: சங்ககிரியில் ரத்த தானம் முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்ககிரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. 

News image
சங்ககிரி வி.என்.பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமினை தொடக்கி வைத்து பார்வையிடுகிறார் திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி .
Updated On :28 ஜனவரி 2024, 3:55 am

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்ககிரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. 

75வது சுதந்திரதினவிழாவினையொட்டி சங்ககிரி வி.என்.பாளையம் யங்ஸ்டார் கிரிக்கெட்கிளப், வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார மையம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனை ஆகியவைகள் இணைந்து நடத்தும் 24ஆவது ரத்த தான முகாம் சங்ககிரி வி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி, மருத்துவர் எ.ஜெகநாதன் ஆகியோர் முகாமினை தொடக்கி வைத்தனர். சங்ககரி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் கே.சண்முகம், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் ரவீந்திரன், வடுகப்பட்டி மருத்துவ அலுவலர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்தம் பெறும் பணியில் ஈடுபட்டனர். கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி ரத்தம் வழங்க வந்தவர்களை சுகாதாரப்பணியாளர்கள் காய்ச்சல் அறியும் நவீன கருவியை கொண்டும், ரத்த அழுத்தம் கணக்கீட்டு செய்து அனுமதித்தனர். இம்முகாமில் யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப்நிர்வாகிகள், ரோட்டரி கிளப், இன்னர்வீல் சங்க  மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்த 125 பர் ரத்த தானம் செய்ய பதிவு செய்தனர். 

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் செல்வராஜ், செயலர் கே.கே.நடேசன் ரோட்டரி கிளப் மாவட்ட நிர்வாகி எ.வெங்கடேஸ்வரகுப்தா, திமுக நகரச் செயலர் (பொறுப்பு) எல்ஐசி சுப்ரமணியன்,  சின்னாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுபபினர் பி.தங்கமுத்து, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கேஜிஆர்.ராஜவேலு, முன்னாள் நகரச் செயலர் கே.எம்.முருகன்,   பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி,  தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செந்திகுமார், பாலாஜி, கிஷோர்பாபு, வழக்குரைஞர் மணிசங்கர், யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.