மனம் கவரும் வண்ண பொங்கல் பானைகள்!
தமிழர் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


தமிழர் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி மாதத்தில் விதைத்த விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் மாதம் தை மாதம் ஆகும். இந்த மாதத்தில் அறுவடையில் கிடைக்கும் நெல்லின் புத்தரிசி, சர்க்கரை, பால், நெய் சேர்த்து புதுப் பானையிலிட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்தலை விமரிசியாக கொண்டாடுவது தமிழர் மரபு. பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரியத்தை மறக்காமல், இயற்கை வழியில் உடல் நலம் பேணும் வகையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் விழிப்புணர்வு தற்போது மக்களிடையே அதிகரித்துள்ளது.
அந்த வகையில், சமையல் பயன்பாட்டுக்கு மண் பாண்டங்களில் தயாராகும் பொருள்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு தேவையான பல வடிவ மண் பானைகள், பிரமனைகள், அகப்பை, தட்டுகள் கடைகளில் விற்பனை அமோகமாக உள்ளது.
பரபரப்பான நகர வாழ்க்கை முறையில் குக்கரில் பொங்கல் வைக்கும் நடைமுறைதான் உள்ளது. அதேவேளையில் பாரம்பரியமும், பண்பாடும் காப்பாற்றப்படும் வகையில் மண் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைப்பது மீண்டும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சமுதாய விழாக்களில் கல்லூரிகள், பள்ளிகளில், குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடத்தப்படும் விழாக்களில் பாரம்பரிய பொங்கல் வைக்கும் விழாவில் மண் பானை முக்கிய இடம் பிடித்துள்ளது.
அதேநேரத்தில் மண் பானை விலையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும் 250 கிராம் முதல், அரை கிலோ, ஒரு கிலோ, 5 கிலோ அரிசியில் பொங்கல் வைப்பதற்குத் தேவையான அளவுகளில் மண் பானை வடிவமைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. சாதாரண மண் பானைகள் ரூ. 50 முதல் ரூ.250 வரையிலும், பல வண்ண வடிவிலான மண் பானைகள் ரூ.80 முதல் ரூ.350 வரையும் கிடைக்கிறது.
மண்ணால் தயாரிக்கப்படும் பொருள்களை தயாரிக்க தேவையான மண் கிடைப்பதில் இந்த ஆண்டு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தரமான மண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. டிராக்டர் மண் விற்பனை ரூ.3,000 வரை உள்ளது. தொழிலாளர்கள் கூலி, செம்மண் அடிப்பவர்கள், போக்குவரத்து செலவு என பல்வேறு வகைகளில் உற்பத்தி செலவு கூடியுள்ளது.
இதனால் மண் பானைகள் விலையும் அதிகரித்துள்ளது.
பொங்கல் பானையில் அடிப்பகுதியில் வைப்பதற்கான பிரமனை ரூ.10 முதல் ரூ.20 வரையும், அகப்பை ரூ.20 முதல் ரூ.30 வரையிலான விலையில் கிடைக்கிறது. ஒற்றை அடுப்பு ரூ.75 விலையில் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...