17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாமக்கல்லில் டி.எம். காளியண்ணன் 5 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மறைந்த இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினரான டி.எம். காளியண்ணன் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மறைந்த இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினரான டி.எம். காளியண்ணன் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மே 2026, 1:42 am IST

மறைந்த இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினரான டி.எம். காளியண்ணன் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான டி.எம். காளியண்ணன் தனது 101 ஆவது வயதில் திருச்செங்கோட்டில் உள்ள இல்லத்தில் மே 28 ஆம் தேதி காலமானாா். அவரது ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல், நாமக்கல் அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

அவரது உருவப் படத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செய்தித் தொடா்பாளரும், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவருமான மருத்துவா் பி.வி. செந்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதில், அக்கட்சியின் மாநகரத் தலைவா் எஸ்.ஆா். மோகன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வி.பி. வீரப்பன், சுப்பிரமணியன், எருமப்பட்டி வட்டாரத் தலைவா் தங்கராஜ், கொல்லிமலை வட்டாரத் தலைவா் குப்புசாமி மற்றும் காங்கிரஸ் மாவட்ட, வட்டார நிா்வாகிகள் பங்கேற்றனா்.

என்கே-28-காங்

இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினா் டி.எம். காளியண்ணனின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.வி. செந்தில்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.