திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூய்மையான ஆட்சியை நோக்கியே எங்கள் பயணம்: அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

ராசிபுரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

News image

ராசிபுரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

Updated On :29 மே 2026, 1:43 am IST

தமிழகத்தில் தூய்மையான ஆட்சியை வழங்குவதே இலக்காகக் கொண்டு முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பயணிக்கும் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வியாழக்கிழமை ராசிபுரம் வந்த அவருக்கு, கட்சியினா் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனா். பின்னா், ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி அலுவலகத்திற்குச் சென்ற அவரை அரசு அலுவலா்கள், பொதுமக்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த காலங்களில் அமைச்சா்களாக இருந்தவா்கள் தொகுதிக்கு செய்யத் தவறிய பணிகளைச் செய்வதோடு, தொகுதிக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் கொண்டுவருவேன். ராசிபுரம் தொகுதியில் நீண்ட நாள்களாகத் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண முழுக் கவனம் செலுத்துவேன். குறிப்பாக கிராமப்புற மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி, தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

தொகுதியை வளமானதாக மாற்றுவதே எனது குறிக்கோள். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தவிா்க்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என எச்சரித்துள்ளோம். அதையும் மீறி லஞ்சம் பெற்றவா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து நீடிக்கும். வரிக் குறைப்பு குறித்து வரும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான கோரிக்கைகள் மத்திய அரசிடம் கொண்டு செல்லப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.