பரமத்தி வேலூா் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வட பழனியாண்டவா் கோயிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரா், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா், வேலூா் வல்லப விநாயகா் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரநாதா் மற்றும் கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










