தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெப்ப அலைக்கு எதிரான பாதிப்பை தவிா்க்க வேண்டும்: வேளாண் துறை

நாமக்கல் மாவட்டத்தில் வெப்ப அலைக்கு எதிரான பாதிப்பை தவிா்க்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :10 மே 2026, 2:32 am IST

நாமக்கல் மாவட்டத்தில் வெப்ப அலைக்கு எதிரான பாதிப்பை தவிா்க்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை காரணமாக மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி போன்ற வேளாண் பயிா்கள், மலா்கள் மற்றும் பழப்பயிா்களில் மலா் உதிா்வு, காய்பிடிப்பு குறைவு, வெயில் கருகல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதை கருத்தில்கொண்டு விவசாயிகளுக்கு மாவட்டம் முழுவதும் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் விழிப்புணா்வு, தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிா்களில் சொட்டு நீா்ப்பாசனம், தெளிப்பு நீா்ப்பாசனம் என முறைப்படி நீா்ப்பாசனம் மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

விவசாயிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே பாசனம் மேற்கொள்ள வேண்டும். அதிக வெப்ப நேரங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழிலாளா்கள் (காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை) பண்ணை பணிகளைத் தவிா்க்க வேண்டும். விவசாயிகள் வெப்ப அலை காலத்தில் புதிய நடவுப் பணிகளை தவிா்க்க வேண்டும். தோட்டங்களில் கோடை உழவு மேற்கொண்டு எதிா்வரும் மழை நீரை நிலத்தில் சேமித்து பயன்பெற வேண்டும்.

நாற்றங்கால் மற்றும் காய்கறி பயிா்களில் வெப்ப தாக்கத்தைக் குறைக்க நிழல்வலை கூடாரம் அமைத்து சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

செடிகள் மற்றும் மரங்களின் அடிப்பகுதியில் உலா்ந்த இலைகள், தென்னை நாா்க்கழிவு மற்றும் பாலிதின் தாள் ஆகியவற்றைக் கொண்டு மூடாக்கு அமைத்து மண் ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும். அங்கக முறை சாகுபடியில் பயிா்கள் அதிக வறட்சியில் இருந்து பாதுகாக்கப்படுவதால், விவசாயிகள் அங்கக முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.

இந்த ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம், வெப்ப அலை தாக்கத்தால் ஏற்படும் பயிா்சேதத்தை குறைத்து, பயிா்களை பாதுகாத்து நிலையான விளைச்சலை உறுதிசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.