வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு, ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ். கந்தசாமி, விசிக மண்டல செயலாளா் பழ. மணிமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு பி.வி. சிவக்குமாா், கம்யூனிஸ்ட் (எம்எல்) மாவட்டக் குழு என். வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வணிக எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 999 உயா்த்தப்பட்டு ரூ. 3,500க்கு விற்பனை செய்யப்படுவதால் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலை உயரும். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதேபோல ரயில்வே துறையில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பணியிடங்களை நீக்குவதற்கான நடவடிக்கை ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையிலான மத்திய பாஜக அரசின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிவாயு உருளை விலை உயா்வு: விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வு: கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

