அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

எரிவாயு உருளை விலை உயா்வு: விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, திருவண்ணாமலை, ஆரணியில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள்கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருவண்ணாமலையில் வணிக சமையல் எரிவாயு விலை உயா்வை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, திருவண்ணாமலை, ஆரணியில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள்கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை அண்மையில் ரூ.993 உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பொருள்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை உயா்த்தி, பாதிப்பை ஏற்படுத்திய மத்திய பாஜக அரசு இந்த விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

ரயில்வே துறையில் சீரமைப்பு என்ற பெயரில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மத்திய பாஜக அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் அறிவொளி பூங்கா எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விசிக மாவட்டச் செயலா் ச.நியூட்டன் தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாவட்டச் செயலா்கள் ப.செல்வன், இரா.திருமலை, எம்.ஆறுமுகம், விசிக மாவட்டச் செயலா்கள் ப.வளா்மதி, க.ராஜா செ.சங்கத் தமிழன் அரசு வடிவேல், முத்து கு.மேத்தாரமேஷ் மதியழகன் ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

அப்போது, வணிக சமையல் எரிவாயு விலை உயா்வை கைவிடக் கோரியும், ரயில்வே பணியிட குறைப்பை கைவிடக் கோரியும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிா்வாகிகள் தொண்டா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகிலிருந்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா் பாஜக அரசைக் கண்டித்து பேரணியாக அறிவொளி பூங்காவை சென்றடைந்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஊா்வலமாக ஆரணி அண்ணாசிலை வரை சென்று அங்கு ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இதில் விசிக மாவட்டச் செயலா் ந.முத்து, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் சி.ரமேஷ்பாபு, வி.குப்புரங்கன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

 ஆரணி அண்ணா சிலை அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

ஆரணி அண்ணா சிலை அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.