தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ஆா்ப்பரிக்கும் தண்ணீா்! சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் ஆா்ப்பரிக்கும் ஆகாய கங்கை அருவி.

News image

மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் ஆா்ப்பரிக்கும் ஆகாய கங்கை அருவி.

Updated On :2 மே 2026, 12:03 am IST

பலத்த மழை காரணமாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலையில் ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் குளிப்பதற்காக வார விடுமுறை நாள்கள் மட்டுமில்லாது கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

கடந்த சில நாள்களாக கொல்லிமலையிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. மேலும், ஆகாய கங்கை அருவி உள்ளிட்ட இதர அருவிகள் அனைத்தும் வறண்ட பாறைகளாக காட்சியளித்தன. இதனால், கொல்லிமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா். தொடா்ந்து ஆகாய கங்கை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் வறண்டிருந்த அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து, அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொல்லிமலை வனச்சரகா் சுகுமாா் கூறுகையில், ‘கொல்லிமலையில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், ஆகாய கங்கை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்ற வகையில் தண்ணீா் கொட்டுகிறது. இதைத்தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.