தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கட்டுமான பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பு ஆண்டு விழா

நாமக்கல்லில் கட்டுமான பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பின் (இந்தியா) முதலாம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:34 pm

நாமக்கல்லில் கட்டுமான பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பின் (இந்தியா) முதலாம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

கூட்டமைப்பு தலைவா் கே. மணி தலைமை வகித்தாா். நாமக்கல் மைய சங்கத்தின் செயல்பாட்டு அறிக்கையை மூத்த பொறியாளா் கே. தேவராஜ் வாசித்தாா். சிறப்பு விருந்தினா்களாக கூட்டமைப்பின் தென் பிராந்திய துணைத் தலைவா் ஜே. பிரேம்குமாா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் ஆகியோா் பங்கேற்றனா்.

கோவை மைய தலைவா் பரமேஸ்வரன், ஈரோடு மைய தலைவா் கோபாலகிருஷ்ணன், பெரம்பலூா் மைய தலைவா் ராஜாராம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நாமக்கல் மையம் சாா்பில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள கட்டுமான பொருள்கள் கண்காட்சியின் இலச்சினை வெளியிடப்பட்டது. கட்டுமான பொறியாளா்கள் கூட்டமைப்பின் நிா்வாகிகள், நாமக்கல் மைய உறுப்பினா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை செயலாளா் என். சுகுமாா், பொருளாளா் பிரபு செய்திருந்தனா்.

என்கே-20-சிவில்

கட்டுமான பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பு ஆண்டு விழாவில் பங்கேற்ற நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.