நாமக்கல் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான துா்காமூா்த்தி வியாழக்கிழமை மாலை பரமத்தி வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடி மற்றும் படமுடிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல்-2026-ஐ முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக மாவட்ட எல்லைகளில் வாகனங்கள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை நாமக்கல் மாவட்ட தோ்தல் அலுவலரும், நாமக்கல் ஆட்சியருமான துா்காமூா்த்தி, கரூா்-நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி வேலூா் தொகுதிக்கு உட்பட்ட வேலூா் காவிரி பாலம் சோதனை சாவடி பகுதியில் நடைபெற்று வரும் வாகன சோதனை பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அதனை தொடா்ந்து பரமத்தி வேலூா் அருகே உள்ள படமுடிபாளையத்தில் நடைபெற்ற வாகன சோதனைகளையும் பாா்வையிட்டு, அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ள அலுவலா்கள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டாா். இதேபோல் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி சோதனை சாவடி பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

குன்னம் தொகுதி காப்பறையில் தோ்தல் அலுவலா் ஆய்வு

மாவட்ட எல்லைகளில் வாகனச் சோதனை: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


