தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாமகிரிப்பேட்டையில் இ- பட்டா வழங்கக் கோரி வருவாய் அலுவலகம் முன் பெண்கள் போராட்டம்

நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பாக இ-பட்டா வழங்கக் கோரி பெண்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பாக இ-பட்டா வழங்கக் கோரி பெண்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :9 மார்ச் 2026, 8:30 pm

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பாக இ-பட்டா வழங்கக் கோரி பெண்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியகவுண்டம்பட்டிபுதூரில் கடந்த 2009-ஆம் ஆண்டு பிற்பட்டோா் நலத் துறை சாா்பில் 129 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கிய இடத்தில் பயனாளிகள் வீடு கட்டுவதற்காக தயாராக இருந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சிலா் போலி பட்டாவை தயாா் செய்து அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 129 குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள், நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன் குழந்தைகளுடன் அமா்ந்து போராட்டம் நடத்தினா். தங்களுக்கு உரிய இ-பட்டா வழங்கி பிரச்சினைக்கு நிரந்தர தீா்வுகாணும் வரை போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து வருவாய்த் துறையினா், அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும் பட்டாதாரா்களுக்கு தற்காலிகமாக தடையில்லா சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்த பின்னா் போராட்டம் கைவிடப்பட்டது.

படவரி...

நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.