நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ்ப் புலிகள் கட்சியினா் 64 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளா் குமரவேல் தலைமையில் வந்த அக்கட்சியினா், கோரிக்கைகளை வலியுறுத்தி,ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.
புதுச்சத்திரம் அருகே உள்ள சேவகவுண்டம்பாளையத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பகுதியைச் சேதப்படுத்தியவா்கள்மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. நாமக்கல் கொசவம்பட்டியில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, தா்னாவில் ஈடுபட்ட 64 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: வீட்டின் முன் குவிந்த தொண்டா்களுக்கு வாழ்த்து கூறிய விஜய்

தமிழ்ப் புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 2 டன் மலா்களால் அபிஷேகம்

வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டாசுத் தொழிலாளா்கள் தா்னா

தமிழ்ப் புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


