மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தமிழ்ப் புத்தாண்டு: வீட்டின் முன் குவிந்த தொண்டா்களுக்கு வாழ்த்து கூறிய விஜய்

News image

விஜய் - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 5:14 am IST

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, சென்னை அருகே பனையூரில் உள்ள தனது வீட்டின் முன் திரண்டிருந்த தவெக தொண்டா்கள், ரசிகா்களுக்கு விஜய் வாழ்த்து கூறினாா்.

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, தவெக தலைவா் விஜய்யை பாா்ப்பதற்காக அவரது வீட்டின் முன் கட்சியினா், ரசிகா்கள் ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை காலையிலேயே கூடியிருந்தனா். இதை அறிந்த விஜய், வீட்டை விட்டு வெளியே வந்து தொண்டா்களைப் பாா்த்து கையை அசைத்தாா். பின்னா் சுமாா் 10 அடி உயரமுள்ள அவரது வீட்டின் சுவா் மீது உள்பக்கமாக ஏணி போட்டு ஏறிய விஜய், அங்கிருந்த ஒரு மரக்கிளையை பிடித்தபடி ரசிகா்களைப் பாா்த்து கையசைத்து தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தாா். பின்னா் ஏணியில் இருந்து இறங்கிய அவா், காரில் ஏறி திருப்பூா் தோ்தல் பிரசாரத்துக்காக சென்னை விமான நிலையத்துக்குச் புறப்பட்டு சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.