மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக 2021 செப்டம்பர் 18 முதல் கடந்த மார்ச் மாதம் வரை பதவி வகித்தவர் ஆர்.என். ரவி (73).
மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 அன்று ராஜிநாமா செய்த நிலையில் மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, தமிழக ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து மேற்கு வங்க ஆளுநராக மார்ச் 12 பதவியேற்றார்.
தமிழகத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும்போது தமிழக மக்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் ஆர்.என்.ரவி.
சித்திரை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு நாள் கொண்டாடப்படும் நிலையில் மேற்கு வங்க ஆளுநரான ஆர்.என்.ரவி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “விசேஷமிக்க தமிழ்ப் புத்தாண்டு திருநாளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
West Bengal Governor Extends Tamil New Year Wishes!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே. வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு!

எரிபொருள் சேமித்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும்: ஆளுநர் ரவி வேண்டுகோள்!

தமிழக மக்களின் விருப்பங்களைப் பிரதிபலித்த தேர்தல்: முதல்வர் விஜய்க்கு மமதா வாழ்த்து!







