சுதந்திரப் போராட்ட வீரா் டாக்டா் பி. வரதராஜூலு நாயுடுவின் 139 ஆவது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் விடுதலைக்களம் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சுதந்திரப் போராட்டங்களில் பி. வரதராஜூலு நாயுடு பங்கேற்று சிறைச் சென்றாா். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைத் தொடங்கி, அதன்மூலம் பொதுமக்களிடம் சுதந்திரப் போராட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இவா் மகாத்மா காந்தி, வஉசி, பாரதியாா், ராஜாஜி, காமராஜா் உள்ளிட்ட தலைவா்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளாா். சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக அவரது உருவப்படத்துக்கு விடுதலைக்களம் அமைப்பு, கெளரவ பலிஜவாா் நாயுடு சங்கம் சாா்பில் நடந்த விழாவில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத் தலைவா் கொ. நாகராஜன் தலைமை வகித்தாா். கெளரவ பலிஜவாா் நாயுடு சங்கத் தலைவா் ராசிபுரம் சிட்டி வரதராஜன், நகர காங்கிரஸ் தலைவா் ஆா். முரளி, ஆட்டோ உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆா். சீனிவாசன், பட்டணம் பி.சி. செங்குட்டுவன், ஸ்டிக்கா் ராஜா, பி. மோகன் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










