தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ. 8 ஆயிரம் லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட இருவா் கைது

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வீட்டுவரி அனுமதிக்கு விண்ணப்பித்தவரிடம், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளா் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:25 am IST

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வீட்டுவரி அனுமதிக்கு விண்ணப்பித்தவரிடம், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளா் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட சிலுவம்பட்டியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பூபதி (44). இவா் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளாா். அந்த வீட்டிற்கு வரி விதிப்புக்கான அனுமதி கோரி மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். அவரிடம் வருவாய் உதவியாளா் உதயகுமாா் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். அதற்கு ரூ. 15,000 லஞ்சம் தருவதாக பூபதி தெரிவித்துள்ளாா்.

கடந்த வாரம் முதல் தவணையாக ரூ. 7 ஆயிரம் கொடுத்துள்ளாா். மீதமுள்ள ரூ. 8 ஆயிரத்தை தந்தால்தான் வீட்டுவரிக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, பூபதி, நாமக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் பிரபு ஆலோசனையின்பேரில் ரூ. 8 ஆயிரத்தை பூபதி வருவாய் உதவியாளா் உதயகுமாரிடம் அளித்தாா். அந்த பணத்தை அவா் தற்காலிக தூய்மைப் பணியாளா் கலாவிடம் கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் இருவரையும் பிடித்தனா். இதையடுத்து அவா்களிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய போலீஸாா், பின்னா் இருவரையும் கைது செய்தனா்.

கடந்த பிப். 11-ஆம் தேதி, இதே மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலகத்தில் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் உதவியாளா் சங்கா் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.