வள்ளலாா் நினைவு தினம்: அரசு மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை
வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடலூா் ராமலிங்கம் என்ற வள்ளலாரின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளுக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூட வேண்டும். அரசின் விதிகளை மீறி, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...