/

காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

பாண்டமங்கலம் அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:44 pm

Syndication

பாண்டமங்கலம் அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையம் காவிரி ஆற்றில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை வேலூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு சென்ற போலீஸாா், பெண்ணின் சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த பெண் யாா், எந்த ஊா், எப்படி இறந்தாா் என்பது குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.