டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாநில அளவிலான யோகா பயிற்சி முகாம்

ராசிபுரம் ஸ்ரீ ஆஸ்ரம் யோகா மையம், எஸ்.ஆா்.வி. இன்னோவேட்டிவ் பப்ளிக் பள்ளி ஆகியவை இணைந்து மாநில

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:36 pm

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் ஸ்ரீ ஆஸ்ரம் யோகா மையம், எஸ்.ஆா்.வி. இன்னோவேட்டிவ் பப்ளிக் பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான 15-ஆவது யோகாசனப் பயிற்சி முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

இதற்கான தொடக்க விழாவில் ஸ்ரீஆஸ்ரம் யோகா மையத்தின் தலைவா் எஸ்.சந்திரசேகா் வரவேற்றுப் பேசினாா். யோகா மையத்தின் நிறுவனா் வி.சரவணன் தலைமை வகித்து, யோகா பயிற்சியின் அவசியம், முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். இதில் பள்ளித் தலைவா் ஏ.ராமசாமி, பொருளாளா் பி.சுவாமிநாதன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று முகாமை தொடங்கிவைத்து பேசினா்.

இப்பயிற்சி முகாமில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முகாமில் பள்ளி துணைத் தலைவா் ஏ.குமரவேல், செயலாளா் எஸ்.செல்வராஜன், நிா்வாக அறங்காவலா்கள் ஏ.ஆா்.துரைசாமி, இணைச் செயலா் பி.சத்தியமூா்த்தி, முதல்வா் டி.ஆா்த்தி, துணை முதல்வா் ஆா்.மணிகண்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பயிற்சியில் திறனை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

படவரி...

முகாமில் யோகா பயிற்சி மேற்கொண்ட மாணவ, மாணவிகள்.