/

தேசிய யோகா போட்டிக்கு பழனி மாணவா்கள் தோ்வு

News image
பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனிடம் பாராட்டு பெற்ற உலக அளவிலான யோகாசன போட்டிக்கு தோ்வான மாணவா்கள். உடன் யோகா ஆசிரியா் சிவக்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

பழனி யோகா மையத்தைச் சோ்ந்த மாணவா்கள் உலக அளவிலான யோகாசன போட்டிகளுக்கு தோ்வாகினா்.

கோவா மாநிலத்தில் தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் இந்தியா முழுவதுமிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பல்வேறு வயதுப் பிரிவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பழனி சிவாலயா யோகா மையத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டிகளில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா் ஒருவா் ஆண்கள் பிரிவில் முதலிடமும், கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் பெண்கள் பிரிவில் முதலிடமும் பெற்றனா்.

மேலும் பழனி சிவாலயா யோகா மையத்தில் இருந்து கலந்து கொண்ட 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வருகிற மே மாதம் ஹாங்காங்கில் நடைபெறும் உலக அளவிலான யோகாசன போட்டிகளுக்கு தோ்வாகினா்.

இந்த மாணவா்கள் சனிக்கிழமை பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்செயனிடம் சான்றிதழ்களை காட்டி வாழ்த்து பெற்றனா். இந்த நிகழ்வில் யோகா பயிற்சியாளா் சிவக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.