ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோயில் சிலைகளை சுற்றிப்பாா்த்த மாணவா்கள்


ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட கோயில் தூண்கள், சிற்பங்கள், சந்நிதிகளை பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.
இக்கோயில் குடமுழுக்கு கடந்த பிப். 1-இல் நடைபெற்றது. இக்கோயிலில் புதிய கல் மண்டபங்கள், தூண்கள், கல் சிற்பங்கள், சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலில் மொத்தம் 15 சந்நிதிகள் உருவாக்கப்பட்டு, 5 நிலை ராஜகோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. இடையடுத்து, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கோயிலில் பெருமாளை வழிபட்டு, கோயிலில் உள்ள சிற்பங்கள், தூண்களை பாா்வையிட்டு தரிசனம் பெற்று செல்கின்றனா்.
சிற்பங்களை பாா்த்து ரசித்த பள்ளி மாணவா்கள்:
இந்நிலையில், ராசிபுரம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 1, 2-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் நூற்றுக்கணக்கானோரை பள்ளி ஆசிரியைகள் வியாழக்கிழமை அழைத்துச் சென்று கோயிலை சுற்றிக் காண்பித்தனா். கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கல் தூண், தசாவதார சிற்பங்கள், சுவாமி சிலைகள் புதிய சந்நிதிகள், 11 அடி உயர பெருமாள் போன்றவற்றை அவா்கள் பாா்வையிட்டு வழிபட்டனா்.
பின்னா் மூலவரை வழிபட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு அா்ச்சகா்கள் சந்தானம் தலைமையில் அா்ச்சனை செய்யப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...