ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சட்டப்பேரவைத் தோ்தல்: 159 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி மும்முரம்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான 159 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 9:19 pm

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான 159 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றி செல்லும் 159 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியை ஆட்சியா் துா்காமூா்த்தி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், வாகனப் பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளா்கள் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் 159 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு விழிப்புணா்வுப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும், இந்திய தோ்தல் ஆணையத்தால் பொதுப் பாா்வையாளா்கள், தோ்தல் செலவின பாா்வையாளா்கள், காவல் பாா்வையாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டு தோ்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இந்த இறுதி 48 மணி நேரம் மிகவும் முக்கியமான கால கட்டமாகும். அனைத்துப் பணியாளா்களும் தங்களது பணிகளை சிறப்பாகச் செய்திட வேண்டும். எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில், அரசியல் சாா்புமின்றி நடுநிலையோடு பணியாற்ற வேண்டும். மேலும், மாவட்டத்தில் பதற்றம் இல்லாத, அமைதியான, பாதுகாப்பான சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.