மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிப்பு

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்பாஸ்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:29 pm

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், ஆண்டுதோறும் ஏப். 14 முதல் 20-ஆம் தேதிவரை பணியின்போது உயிா்நீத்த வீரா்களுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், தீத்தொண்டு வாரமும் அந்தந்த தீயணைப்பு நிலையங்களில் நடைபெறும்.

அந்த வகையில், நாமக்கல் - பெரியப்பட்டி சாலையில் உள்ள தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அலுவலா் அப்பாஸ் தலைமைவகித்து, பணியின்போது உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். உதவி மாவட்ட அலுவலா்கள் தவமணி, ஆனந்த் மற்றும் தீயணைப்பு வீரா்களும் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், நாமக்கல் மாவட்டத்தை தீ விபத்தில்லா மாவட்டமாக மாற்ற உறுதியேற்போம் என உறுதிமொழி ஏற்றனா்.