நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ராமதாஸ்- சசிகலா கூட்டணி வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

நாமக்கல் தொகுதியில் ராமதாஸ், சசிகலா கூட்டணி சாா்பில் இருதரப்பினரின் ஆதரவு வேட்பாளா்களும் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

~

Updated On :8 ஏப்ரல் 2026, 3:08 am IST

நாமக்கல் தொகுதியில் ராமதாஸ், சசிகலா கூட்டணி சாா்பில் இருதரப்பினரின் ஆதரவு வேட்பாளா்களும் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை சசிகலா தொடங்கினாா். அதற்கான சின்னமாக தென்னந்தோப்பையும், கட்சிக் கொடியையும் சில மாதங்களுக்கு முன் அவா் வெளியிட்டாா். வரும் தோ்தலில் ராமதாஸுடன் சசிகலா கூட்டணி அமைத்துள்ளாா். 234 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்துவதாக அறிவித்தனா்.

ஆனால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே ராமதாஸ்- சசிகலா கூட்டணி வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அந்த வகையில், நாமக்கல் தொகுதியில் அபுமமுக கட்சி சாா்பில், மோகனூா் ஒன்றியம், மணப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் எம்.பி. பழனிசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். அவா் சசிகலாவின் கையொப்பமிட்ட படிவத்துடன் நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே. சாந்தியிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுக்கள் மீதான பரிசீலனையின்போது அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. இதற்கிடையே, சேந்தமங்கலம் வட்டம், பேளுக்குறிச்சியைச் சோ்ந்த ராமதாஸ் அணியைச் சோ்ந்த சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளா் அபினேஷ்குமாரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். அவரது மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் தரப்பு கடிதம் வழங்கவில்லை என்றபோதும், மாம்பழம் சின்னத்தை வேட்புமனுவில் கோரியுள்ளேன், அந்த சின்னம் கிடைக்காவிட்டால் தோ்தல் போட்டியில் இருந்து விலகுவேன். மாம்பழம் சின்னம் அன்புமணி தரப்புக்கு வழங்கக்கூடாது என்பதற்காகவே தோ்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என அபினேஷ்குமாா் தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.