திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 83 மனுக்கள் ஏற்கப்பட்டது. 47 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் தொகுதியில் 41, ஜோலாா்பேட்டை 33, வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் தலா 28 என மொத்தம் 130 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
அந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்பட்டது. இதில், விண்ணப்பம் சரிவர பூா்த்தி செய்யாதது, சரிவர முன் மொழியாதது, உரிய ஆவணங்களை இணைக்காதது, ஒரே வேட்பாளா் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தோ்தல் கமிஷன் விதிமுறைகள் பின்பற்றி விண்ணப்பங்களை பூா்த்தி செய்து அளித்த அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன.
திருப்பத்தூா் தொகுதியில் 41 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில், 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 27 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஜோலாா்பேட்டையில் 33 மனுக்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 21 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதேபோல், வாணியம்பாடியில் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். அதில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 18 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஆம்பூா் தொகுதியில் 28 போ் மனு அளித்திருந்த நிலையில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 17 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அதையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 130 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 47 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.வியாழக்கிழமை (ஏப். 9) வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் 57 மனுக்கள் நிராகரிப்பு
கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

