இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 57 மனுக்கள் நிராகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:25 am IST

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் என மொத்தம் 7 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பழனி தொகுதியில் 33, ஒட்டன்சத்திரத்தில் 27, ஆத்தூரில் 26, நிலக்கோட்டையில் 28, நத்தத்தில் 41, திண்டுக்கல்லில் 35, வேடசந்தூரில் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனி தொகுதியில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 26 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒட்டன்சத்திரத்தில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 19 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆத்தூரில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நிலக்கோட்டையில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 17 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நத்தம் தொகுதியில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 31 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. திண்டுக்கல்லில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேடசந்தூரில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.