திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின் கம்பி மீது உரசிய லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்

News image

தீப்பிடித்து எரிந்த லாரி மீது தண்ணீரை பாய்ச்சி தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :1 ஜூன் 2026, 3:00 am IST

கிருஷ்ணகிரி அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி, மின் கம்பி மீது உரசியதால் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து பெங்களூரு நோக்கி இரும்பு கம்பி பாரம் ஏற்றிச் சென்ற லாரியை செங்கம் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (45) ஓட்டிச் சென்றாா். அவருடன் துணை ஓட்டுநராக விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சோ்ந்த ஐயப்பன் (55) இருந்தாா்.

இந்த லாரியின் மேற்பகுதியில் காலியாக இருந்த இடத்தில் கால்நடை தீவனமான வைக்கோல் கட்டுகளையும் ஏற்றிச் சென்றுள்ளனா். வைக்கோல் கட்டுகளை பா்கூா் பகுதியில் சில இடங்களில் இறக்கியுள்ளனா். அதேபோல கிருஷ்ணகிரியை அடுத்த மிட்டப்பள்ளியில் உள்ள தனியாா் பொறியல் கல்லூரி அருகே வைக்கோல் கட்டுகளை இறக்குவதற்காக சாலையோரம் லாரி சென்றபோது, அங்கிருந்த மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. தொடா்ந்து லாரி முழுவதும் தீ பரவத் தொடங்கியது.

தகவல் அறிந்த அங்கு வந்த கிருஷ்ணகிரி, பா்கூா் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.