திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிருஷ்ணகிரியில் ரூ.3.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

கிருஷ்ணகிரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், ரூ. 3.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

News image

மஞ்சள்

Updated On :23 மே 2026, 1:14 am IST

கிருஷ்ணகிரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், ரூ. 3.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இ-நாம் முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், 9 விவசாயிகள், 42 மூட்டை மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.

இதில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் அதிகபட்சமாக ரூ. 13,339-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 12,899-க்கும், உருண்டை மஞ்சள் அதிகபட்சமாக ரூ.12,473-க்கும், குறைந்தபட்சமாக ரூ.11,899-க்கும், பனங்காலி ரூ. 26,009-க்கும் ஏலம் போனது. மொத்தம், 2,662 கிலோ மஞ்சள், ரூ. 3.52 லட்சத்துக்கு ஏலம் போனது. ஏலம் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் பழனியம்மாள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இ--நாம் முறையில் நடந்த ஏலத்தில், மஞ்சளின் தரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விவசாயிகள், தங்கள் விளைபொருளை கிடங்கில் இருப்பு வைத்து, சந்தை மதிப்பில், 50 முதல் 75 சதவீதம் வரை ஆண்டுக்கு 5 சதவீதம் வட்டியில் பொருளீட்டு கடன் பெறலாம். உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்யும் வசதியும் உள்ளது. மேலும், விவரங்களுக்கு 99522 67990 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.