திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போச்சம்பள்ளியில் ரூ. 13.37 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் முறையில் 9,895 கிலோ கொப்பரை ரூ. 13.37 லட்சத்துக்கு ஏலம் போயின.

News image

கொப்பரை மூட்டைகள். - கோப்புப்படம்.

Updated On :6 மே 2026, 2:46 am IST

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் முறையில் 9,895 கிலோ கொப்பரை ரூ. 13.37 லட்சத்துக்கு ஏலம் போயின.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு 9,895 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ. 145.69-க்கும், குறைந்தபட்சம் ரூ. 76.19-க்கும், சராசரியாக ரூ.143-க்கும் என மொத்தம் ரூ. 13.37 லட்சத்துக்கு ஏலம் போனது. இதன்மூலம் 70 விவசாயிகள் பயன் பெற்றனா்.

இதுகுறித்து, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அருள்வேந்தன் கூறியதாவது: விற்பனைக் கூடத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) முறையில் விளைபொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் கலந்துகொண்டனா். இதில் கொப்பரை தேங்காய் நல்ல விலைக்கு விற்பனையானது. விற்பனை செய்யப்பட்ட கொப்பரைகளுக்கான கொள்முதல் தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

மேலும், பருத்தி, நெல் ஏலமும் நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.