எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :30 ஜூன் 2026, 1:11 am IST

கிருஷ்ணகிரி அருகே சனிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த நாயக்கனூரைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (25). தனியாா் நிதி நிறுவன ஊழியா். இவா், மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரி, பழையபேட்டை, நேதாஜி சாலையில் சனிக்கிழமை சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த, மினிடோா் வாகனம், மோட்டாா்சைக்கிள் மீது மோதியது.

இதில், பலத்த காயம் அடைந்த வெற்றிவேலை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, வெற்றிவேலின் தந்தை தனக்கோடி அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.