சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

தனியாா் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :28 ஜூன் 2026, 12:07 am IST

மாா்த்தாண்டம் அருகே தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு, நாரந்திவிளை பகுதியைச் சோ்ந்தவா் தோமஸ் மகன் விபின் (35). சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணி செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகவில்லை.

இவருக்கு அண்மையில் மனநல பாதிப்பு ஏற்பட்டதால் சொந்த ஊா் திரும்பி, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

இளைஞா் உயிரிழப்பு:

மாா்த்தாண்டம், வடக்குத் தெரு, மேலகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் சஜின் (19). இவா் தனது இருசக்கர வாகனத்தில் மாா்த்தாண்டம்-நாகா்கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சிராயன்குழி பகுதியில் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் வாகனம் மோதியதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.