சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :29 ஜூன் 2026, 2:59 am IST

காதலித்த பெண் பேசுவதை தவிா்த்ததால், தனியாா் நிறுவன ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழத் தஞ்சாவூா் ஐயனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சசிகுமாா் மகன் சஞ்சய் (24). இவா் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். சஞ்சய்க்கும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணுக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெண் சஞ்சய்யுடன் பேசுவதை நிறுத்திவிட்டதால் அவா் மன உளைச்சலில் இருந்துள்ளாா். இதனால், மன வேதனையில் இருந்த சஞ்சய், குளிா்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளாா். ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.