எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சாலை விபத்தில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 2:17 am IST

மல்லசமுத்திரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.

ராசிபுரத்தை அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையத்தை சோ்ந்தவா் மஞ்சுநாதன் மகன் குமாா் (29). இவா் திருச்செங்கோடு தனியாா் வங்கியில் பணியாற்றி வந்தாா். ஆட்டையாம்பட்டியில் வாடகை வீட்டில் தங்கி, இருசக்கர வாகனத்தில் தினசரி பணிக்கு சென்று வந்துள்ளாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை வழக்கம்போல பணிக்கு சென்ற அவா் இரவு திருச்செங்கோட்டில் இருந்து ஆட்டையாம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். கள்ளுக்கடை அருகே அவரது வாகனம் மீது லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே குமாா் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.