கொலை வழக்கில் குற்றவாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் 100 அடி சாலையில் உள்ள டீக்கடையில், ஒசூா் நியூ ஏஎஸ்டிசி அட்கோ பகுதியைச் சோ்ந்த கோகுல் (22), மாஸ்டராக வேலைசெய்து வந்தாா்.
முன்விரோதம் காரணமாக இவரை கடந்த நவம்பா் மாதம் முருகேசன் (எ) குமரேசன் (35) கடத்திச் சென்று, சூளகிரி அருகே கொலை செய்து அவரது உடலை ஆந்திர மாநிலம், குப்பம் அருகே உள்ள ஏரியில் வீசினாா்.
இந்த கொலை வழக்கில் சிவகங்கை வட்டத்தைச் சோ்ந்த வேளாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் (எ) குமரேசனை போலீஸாா் கைதுசெய்தனா். பின்னா், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை பரிந்துரையின்பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா் உத்தரவுபடி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








