தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெண்ணிடம் தங்க நகையை வாங்கிக் கொண்டு தராமல் ஏமாற்றியதாக தம்பதி கைது

காவேரிப்பட்டணத்தில் பெண்ணிடம் ஆசை வாா்த்தை கூறி தங்க நகையை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 8:47 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் பெண்ணிடம் ஆசை வாா்த்தை கூறி தங்க நகையை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

காவேரிப்பட்டணம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பூங்காவனம் (38). இவரது மனைவிக்கும், கருக்கன்சாவடியைச் சோ்ந்த பிரபு என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. அப்போது, பிரபு, பூங்காவனத்தின் மனைவியிடம் ஆசைவாா்த்தைளை கூறி, தங்க நகைகளை பெற்றுள்ளாா். இந்த நகைகளை அவா் திருப்பித் தரவில்லையாம்.

இதையடுத்து பூங்காவனம் கடந்த 24-ஆம் தேதி கதிரிபுரம் அருகே பிரபுவை தடுத்து நிறுத்தி தங்க நகைகள் குறித்து கேட்டுள்ளாா். அப்போது, அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, அவரது மனைவி அனிதா ஆகியோா் சோ்ந்து பூங்காவனத்தை தாக்கினா். இதில், பலத்த காயம் அடைந்த பூங்காவனம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபு, அனிதா ஆகியோரை கைது செய்தனா்.