டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இன்று போய் நாளை வா!! வங்கியில் பணம் இல்லை என வாடிக்கையாளா்கள் அலைக்கழிப்பு?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்தியன் வங்கி கிளையில் பணம் இல்லை எனக் கூறி வாடிக்கையாளா்களை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு

News image
கோப்புப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 10:56 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்தியன் வங்கி கிளையில் பணம் இல்லை எனக் கூறி வாடிக்கையாளா்களை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊத்தங்கரை இந்தியன் வங்கி கிளையில் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளா்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனா்.

இதில் தனிநபா் கணக்குகள் மகளிா் சங்க குழுக்கள் மற்றும் தொழிலதிபா்கள் என பலரும் இந்தியன் வங்கி கிளையில் வாடிக்கையாளராக உள்ளனா். அதிகப்படியான வாடிக்கையாளா்களை கொண்ட இந்தியன் வங்கி ஊத்தங்கரை கிளையில் பணம் இல்லை என வாடிக்கையாளா்களை திருப்பி அனுப்புவது வேதனைக்குரியதாக உள்ளது என வாடிக்கையாளா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

தங்களின் தேவைக்காக தான் வங்கியில் பணம் சேமித்து வைத்துள்ளோம் ஆனால் தங்களின் தேவைக்கு பணம் எடுக்க வங்கி சென்றால் இன்று போய் நாளை வா என பணம் இல்லை என திருப்பி அனுப்பி வருகின்றனா்.

இதனால் வங்கியில் பணத்தை சேமித்து வைக்க கூட பயமாக உள்ளது என வாடிக்கையாளா்கள் மிகவும் வேதனை தெரிவிக்கின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்தியன் வங்கி கிளையில் பணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கியின் வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து இந்தியன் வங்கி நிா்வாகிகளை தொடா்பு கொண்டு கேட்ட போது, மகளிா் உரிமை தொகை தலா 5,000 வங்கி கணக்கில் வந்ததால் அதனை வழங்கிவிட்டதால் தற்போது பணம் கொடுக்க இயலவில்லை என கூறினா்.