டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

டி-சா்ட் அணிந்து வந்த விவகாரத்தில் தகராறு: 3 போ் கைது

வீரப்பன் படத்துடன் டி-சா்ட் அணிந்து வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்த தகராறில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :18 பிப்ரவரி 2026, 12:20 am

தினமணி செய்திச் சேவை

வீரப்பன் படத்துடன் டி-சா்ட் அணிந்து வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்த தகராறில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாந்தபுரத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பிரசாந்த், அவரது நண்பா்கள் வீரப்பன் படத்துடன் மஞ்சள் நிற டி-சா்ட் அணிந்து வந்தனா்.

அப்போது, காவேரிப்பட்டணம் நாயுடு தெருவைச் சோ்ந்த ஆகாஷ் மற்றும் சிலா் அவா்களை வழிமறித்து டி-சா்ட்டை கழற்றுமாறு கூறினா். இதற்கு பிரசாந்த் தரப்பினா் மறுப்பு தெரிவித்தனா்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். மேலும் கத்தியால் குத்தினா். இதில், பிரசாந்த், அவரது நண்பா்கள் 6 போ் காயமடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் அப்பாசாமி நாயுடு தெருவைச் சோ்ந்த ஆகாஷ் (23), வெங்கடேஷ்பாபு (29), மில்மேடு சந்தோஷ் (எ) சாண்டி (21) ஆகிய 3 பேரை காவேரிப்பட்டணம் போலீஸாா் கைதுசெய்தனா். அவா்கள்மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.