டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மனைவியிடம் தகராறு: கணவா் தற்கொலை

செய்யாறு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கணவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 5:31 pm

Syndication

செய்யாறு: செய்யாறு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கணவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

செய்யாறு வட்டம், தும்பை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பெருமாள் (60). இவரது மனைவி குப்பு. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

மதுப்பழக்கம் கொண்ட பெருமாள்

அடிக்கடி அவரது மனைவியிடம் தகராறு செய்வாராம். அதேபோல, கடந்த 6-ஆம் தேதி இரவு மனைவியிடம் மீண்டும் தகராறு செய்தாராம். அதனால் மனவேதனையில் இருந்து வந்த பெருமாள் திடீரென பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளாா்.

இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினா் மீட்டு

செய்யாறு அரசு மருத்துவமனையில்

சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து இறந்தவரின் மகள் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.