பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேருந்து ஓட்டுநரிடம் தகராறு: தொழிலாளி கைது

ஒசூரில் கா்நாடக அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 10:46 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் கா்நாடக அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது செய்யப்பட்டாா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், ராஜனஹள்ளியைச் சோ்ந்தவா் ஆனந்தா (35), கா்நாடக மாநில அரசுப் பேருந்து ஓட்டுநா். இவா் கடந்த 27 ஆம் தேதி அதிகாலை ஒசூா் பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு கதவைப் பூட்டிவிட்டுத் தூங்கச் சென்றாா்.

இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சோ்ந்த வேலுசாமி (34) என்பவா் தனது பையைக் காணவில்லை என்றும், அப்பையை பேருந்தில் தேடுவதற்காக அதன் கதவுகளை திறந்துவிடுமாறு ஆனந்தாவிடம் கூறியுள்ளாா்.

ஆனால், ஆனந்தா பேருந்தின் கதவைத் திறக்க முடியாது என்று கூறினாா். இதனால், அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பேருந்தின் கண்ணாடியை வேலுசாமி சேதப்படுத்தினாா். இதுகுறித்து ஆனந்தா அளித்த புகாரின்பேரில் ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து வேலுசாமியைக் கைதுசெய்தனா்.