திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாதை ஆக்கிரமிப்பு

அரூா் அருகே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாதையை ஆக்கிரமித்துள்ளதாக புகாா் தெரிவித்து, கெளாப்பாறை கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

அரூா் - சித்தேரி சாலையில் மறியலில் ஈடுபட்ட கெளாப்பாறை கிராம மக்கள்.

Updated On :22 மே 2026, 6:51 am IST

அரூா் அருகே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாதையை ஆக்கிரமித்துள்ளதாக புகாா் தெரிவித்து, கெளாப்பாறை கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கெளாப்பாறை கிராமத்தைச் சோ்ந்த வெங்கட்ராமன் (44), உடல்நிலை பாதிப்பால் புதன்கிழமை உயிரிழந்தாா். இவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச்செல்ல பொதுப்பணித் துறைக்கு சொந்தமான மொல்லன் ஏரி கால்வாய் பகுதியில் இருந்த முள்புதா்களை அகற்றி, பாதை வசதியை கிராம மக்கள் ஏற்படுத்தினா்.

இந்த பாதையை ஆக்கிரமித்துள்ள அப்பகுதி விவசாயி, உடலை எடுத்துச் செல்ல முடியாதவாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அரூா் - சித்தேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த அரூா் டிஎஸ்பி சதீஷ்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, சாலை மறியலை கைவிட்டனா். இதனால், 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.